போர்ட்லாண்ட்:அமெரிக்காவில் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த 10 வயது சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் மேனே மாகாணத்தில் மன்றோ என்ற இடத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் படிக்கும், 10 வயது மாணவன் ஒருவன், துப்பாக்கியுடன் வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பள்ளிக்கு சென்ற போலீசார், வகுப்பாசிரியர் உதவியுடன் அம்மாணவனிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
துப்பாக்கியுடன் வந்த மாணவனை, பள்ளியில் இருந்து நீக்கி பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்பின், சம்பந்தப்பட்ட மாணவனை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிக்கோ அல்லது வேறு யாருக்கும் எவ்வித மிரட்டலும் விடுக்காத நிலையில், பள்ளி வளாகத்துக்குள் துப்பாக்கியுடன் வர என்ன காரணம் என்பது குறித்து, கைதான மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement