அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை விமான நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி ராஜேஸ்வரன் தாக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் பேருந்தில் சென்ற போது அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பிரமுகர் ராஜேஷ் என்பவர் அவதூறாக பேசி பேஸ்புக்கில் லைவ் செய்தார்.
இதனைகண்ட எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் செல்போனை பிடுங்கியதாக கூறப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்களில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம் செய்ததாக அதிமுக நிர்வாகி ராஜேஸ்வரன் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.