மீண்டும் பீதியை ஏற்படுத்தும் கொரோனா, தமிழ்நாட்டில் ஒருவர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்தது. இந்த நிலையில் ஒமிக்ரைன் வகை தொற்று தற்போது அதிகளவில் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனாவுக்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி சிந்தாமணி, பூசாரி தெருவை சேர்ந்த உதயகுமார், பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இவர் சுற்றுலா செல்வதற்காக கோவா சென்று உள்ளார் கோவா சென்ற அவர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அங்கு சென்று சுற்றுலா முடிந்த பின்பு திருச்சி திரும்பி உள்ளார். இந்நிலையில் கோவாவில் இருந்து திருச்சி திரும்பிய உதயகுமாருக்கு கடும் வயிற்றுப்போக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது இதன் காரணமாக திருச்சி பாபு ரோடு பகுதியில் உள்ள தனியார் (ஜி வி என்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்.., அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.., கொரோனா தொற்று உறுதி செய்வதற்கு முன்பே அவர் நேற்று காலை இறந்துவிட்டார்.

மேலும் நேற்று மதியத்திற்கு மேல் கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று கொரோனா தொற்று காரணமாக அவர் உயிரிலிருந்து உள்ளார்.

இதற்கிடையில் இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கூறுகையில்.., பெங்களூருவில் பணியாற்றும் உதயகுமார் சுற்றுலா செல்வதற்காக கோவா சென்று அங்கு உடல் உபாதை காரணமாக திருச்சி தனியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று காலை உயிரிழந்தார் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக அவருடன் சுற்றுலா சென்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு ஒருநாள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அவர்களுக்கு எந்தவித கொரோனா அறிகுறியும் இல்லை. மேலும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.11 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,811,657 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 681,473,529 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 654,357,397 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,318 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.