Mamta Mohandas:அவ நடிச்சா நான் நடிக்க மாட்டேனு சொன்னார் நயன்தாரா: மம்தா மோகன்தாஸ் அதிர்ச்சி தகவல்

Rajinikanth, Nayanthara: நயன்தாரா செய்த காரியத்தால் தன்னை ரஜினி படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக மம்தா மோகன்தாஸ் கூறியிருக்கிறார்.

​குசேலன்​பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் குசேலன். அந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்திருந்தார் நயன்தாரா. Katha Parayumbolமலையாள படத்தின் ரீமேக் தான் குசேலன். அந்த படத்தில் நடிக்க மம்தா மோகன்தாஸை ஒப்பந்தம் செய்தார்கள். ஒரிஜினல் படத்தில் என் கதாபாத்திரம் இல்லை. இந்த படத்தில் அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியதே ரஜினி சார் தான் என மம்தா மோகன்தாஸ் அப்பொழுது தெரிவித்தார்.
​மம்தா மோகன்தாஸ்​குசேலன் படம் குறித்து மம்தா மோகன்தாஸ் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. மம்தா கூறியிருப்பதாவது, குசேலன் படத்திற்காக நான்கு, ஐந்து நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஆனால் படம் வெளியானபோது அதில் நான் இல்லை. பாடல் காட்சி நடக்கவில்லை. வேறு ஒரு ஹீரோயின் டான்ஸ் ஆடினால் நான் நடிக்க மாட்டேன் என குசேலன் பட ஹீரோயின் கூறியதாக பின்னர் கேள்விப்பட்டேன் என்றார்.

​தெரியும்​இது தான் நான் கேள்விப்பட்டது. இதை தான் என்னிடம் கூறினார்கள். இன்னொரு நடிகை இருப்பதால் நான் பயப்படவில்லை. அவங்க கேமராவை வைத்தபோதே நான் ஃபிரேமில் இல்லை என்பது தெரியும். அந்த பாடலில் என் பங்கு இல்லை. நான் 3, 4 நாட்கள் வீணடித்தது தான் மிச்சம். ஆனால் படம் ரிலீஸானபோது என்னுடைய பேக் ஷாட் இருந்தது. என் தொப்பியின் நுனி மட்டும் தெரிந்தது. என் முகம் தெரியாது. அதை பார்த்து தான் அதிருப்தி அடைந்தேன் என மம்தா மோகன்தாஸ் மேலும் தெரிவித்தார்.

​Rajinikanth: மீண்டும் இஸ்லாத்திற்கு மாறும் ரஜினி: ஆனால் பெரிய சம்பவமாம்

​ஷூட்டிங்​துபாயில் வேறு ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்திருக்கிறார் மம்தா. ஆனால் குசேலன் பட வாய்ப்பு கிடைத்ததும் அந்த ஷூட்டிங்கிற்காக கிளம்பி வந்திருக்கிறார். ஒரு படத்தை இயக்கும் பெண்ணாக நடிக்கத் தான் மம்தா மோகன்தாஸை அழைத்திருக்கிறார்கள். அப்படியே ஒரு பாடலுக்கு ரஜினியுடன் சேர்ந்து ஆட வேண்டும் என கூறியிருக்கிறார்கள். ரஜினி படத்தில் நடிக்க ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என்று அப்பொழுது தெரிவித்தார் மம்தா மோகன்தாஸ்.

​Ajith: மகிழ்திருமேனி அல்ல ஷங்கருக்காக வெறித்தனமாக மாறிய அஜித்?!: ப்ப்பா, இது வேற லெவல்

​நயன்தாரா​மம்தா மோகன்தாஸ் நயன்தாராவை பற்றி கூறியது சினிமா ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. ஒரு சக நடிகையை பார்த்து பயந்தாரா நயன்தாரா?. அது ஏன் மம்தா மோகன்தாஸ் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்றார். இதற்கு ஏதாவது காரணம் இருக்கும். அதை என்றாவது நயன்தாரா நிச்சயம் தெரிவிப்பார் என்கிறார்கள். இதற்கிடையே எந்த நடிகையையும் பார்த்து பயப்படும் ஆள் இல்லை நயன்தாரா என அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.