Rajinikanth: மீண்டும் இஸ்லாத்திற்கு மாறும் ரஜினி: ஆனால் பெரிய சம்பவமாம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தை அவர் இயக்குவார், இவர் இயக்குவார் என்று பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டது. இறுதியில் அந்த வாய்ப்பு ஜெய்பீம் படம் புகழ் ஞானவேலுக்கு கிடைத்திருக்கிறது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 170 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சூர்யாவை வைத்து சம்பவம் செய்த ஞானவேல் சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பை நிச்சயம் வீணடிக்க மாட்டார். ரஜினியை வைத்து வேற லெவலில் சம்பவம் செய்து ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைப்பார் என தலைவர் ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இந்நிலையில் தான் முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது. ஜெய்பீமை போன்றே தலைவர் 170 படத்தையும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தான் எடுக்கிறாராம் ஞானவேல். அந்த படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம் ரஜினி.

அவர் ஒரு இஸ்லாமியராக நடிக்கிறாராம். போலீசார் நடத்தும் என்கவுண்ட்டர்களுக்கு எதிராக போராடும் நபராக நடிக்கிறாராம். காவல் துறையில் நடக்கும் அத்துமீறல்களை திரையில் காட்டப் போகிறாராம் ஞானவேல்.

ரஜினி படம் மூலம் ஒரு மெசேஜ் சொன்னால் அது பெரிய அளவில் ரீச் ஆகும் என்று நம்புகிறார் இயக்குநர். அதனால் ரஜினியை வைத்து மாஸான மெசேஜ் சொல்லப் போகிறாராம்.

Thalaivar 170: ரஜினியின் தலைவர் 170 படத்தை இயக்கும் ஜெய்பீம் ஞானவேல்: கொந்தளிக்கும் அஜித் ரசிகர்கள்

தலைவர் 170 படத்தை ஞானவேல் இயக்குவார், அனிருத் இசையமைப்பார் என்று மட்டும் தான் அறிவித்தார்கள். அந்த படத்தில் யார், யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இந்நிலையில் விரைவில் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரஜினி ரசிகர்களை திக்குமுக்காட வைக்கப் போகிறார்களாம்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த தகவல் அறிந்த ரஜினி ரசிகர்கள் சந்தோஷத்திலும், அஜித் ரசிகர்கள் கவலையிலும் இருக்கிறார்களாம். தலைவர் 170 போஸ்டர் எல்லாம் வரப் போகுது, ஆனால் அஜித்தின் ஏ.கே. 62 பட அறிவிப்பு மட்டும் வர மாட்டேங்குது. இந்த லைகா நிறுவனம் கூட எங்களை இப்படி அலையவிட்டு வேடிக்கை பார்க்கிறதே என அஜித் ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ஏ.கே. 62 படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது. அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அதனால் தான் அஜித் ரசிகர்கள் லைகா மீது கடுப்பில் இருக்கிறார்கள்.

இதற்கிடையே ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. அந்த பட வேலையை முடித்துவிட்டு தன் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்கிறார் ரஜினி.

அந்த படத்தில் கவுரவத் தோற்றத்தில் தான் வருகிறார். லால் சலாம் படத்தில் இஸ்லாமியராக நடிக்கிறார் ரஜினி. இந்நிலையில் ஞானவேல் படத்திலும் இஸ்லாமியராக நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

Rajinikanth: ஆயிரம் தான் இருந்தாலும் ரஜினி சொன்னது தப்பு தான்: ரசிகர்கள்

தலைவர் 170 படத்துடன் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு பேரன்களுடன் ஜாலியாக நேரம் செலவிட திட்டமிட்டுள்ளார் ரஜினி. ஆனால் அவரின் திட்டம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ரஜினி கடைசி வரை நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.