வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன் : ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தவும், சீனாவின் அத்துமீறல்களை முறியடிக்கவும், அணுசக்தியால் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
பசிபிக் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்ய, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் இடையே, ‘ஆக்கஸ்’ என்ற பாதுகாப்பு ஒப்பந்தம் 2021ல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பல்வேறு பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்த நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன.
இந்த வகையில், அமெரிக்கா தயாரிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு தர அந்நாடு முடிவு செய்துள்ளது.
![]() |
இந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களை விட அதிக நேரம் மற்றும் வெகுதுாரம் தண்ணீருக்குள் பயணிக்கும் திறன் உடையது.
பல்வேறு நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகும் இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள், 2030ல் ஆஸ்திரேலியாவிடம் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தவும், சீனாவின் அத்துமீறல்களை முறியடிக்கவும் ஆஸ்திரேலியாவுக்கு இந்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் அமெரிக்காவில் இன்று சந்திக்கின்றனர்.
அப்போது, ஆக்கஸ் கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement