ஹஜ் புனித பயணம் செல்ல விரும்பும் இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் இந்தாண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் இஸ்லாமியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக அல்லது மும்பை இந்திய ஹஜ் குழுவின் ‘HCoI’ செயலி மூலமாக மார்ச் 10ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ஹஜ் புனித பயணம் செல்ல விரும்பும் இஸ்லாமியர்கள் மார்ச் 20ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பதாரர் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.