புதுடில்லிஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீ காரம் கோரும் வழக்குகளை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
ஒரே பாலினத்தினர் உறவு கொள்வதை குற்றமாக பார்க்கும் சட்டப் பிரிவை நீக்கி, உச்ச நீதிமன்றம் ௨௦௧௮ல் உத்தரவு பிறப்பித்தது.
பிரச்னை
இந்நிலையில், ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கேட்டு, பல வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
பல உயர் நீதிமன்றங்களில் இருந்த இந்த வழக்கு களை தனக்கு மாற்றச் செய்து, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் மத்திய அரசு சமீபத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. ‘ஆணும், பெண்ணும் இணைவதுதான் திருமண பந்தம். ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீ காரம் அளித்தால், அது சமூகத்தில் பெரிய தாக்கத்தை, குழப்பத்தை ஏற்படுத்திவிடும்’ என, அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:
இந்த வழக்கு, ஒரு பக்கம் அரசியல் சாசன உரிமை தொடர்பாகவும், மற்றொரு பக்கம் சிறப்பு திருமணச் சட்டம் உட்பட பல சட்டங் களில் திருத்தம் செய்ய வேண்டிய பிரச்னையை யும் எழுப்பி உள்ளது.
விசாரணை
இது, எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். எனவே, இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிப்பதே உகந்ததாக இருக்கும்.
இதனால், அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு பரிந்துரைக்கிறோம்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
இந்த வழக்கு வரும் ஏப்., ௧௮ முதல் விசாரிக்கப்படும் என்றும், அரசியல் சாசன அமர்வு விசாரணை என்பதால், நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்