கனவில் வாழ்வது போல் உணர்கிறேன் : ராம்சரண் நெகிழ்ச்சி

நாட்டு நாட்டு படாலுக்காக ஆஸ்கர் விருது வென்ற ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு பிரதமர் மோடி மற்றும் மாநில முதலமைச்சர்கள், திரை உலகினர் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆர்ஆர்ஆர் பட நாயகர்களில் ஒருவரான ராம்சரண் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், ‛‛ஆர்ஆர்ஆர் இந்திய சினிமா வரலாற்றிலும் எங்கள் வாழ்க்கையிலும் ஒரு சிறந்த படமாக இருக்கும். ஆஸ்கார் விருதை வென்றதற்காக அனைவருக்கும் நன்றி சொல்ல முடியாது. இப்போது நான் கனவில் வாழ்வது போல் உணர்கிறேன். நிற்க கூட முடியாத அளவுக்கு ஆதரவையும் அன்பையும் வழங்கிய அனைவருக்கும் நன்றி.

ராஜமவுலியும், கீரவாணியும் நம்முடைய இந்திய திரையுலகில் விலை மதிப்பற்ற ரத்தினங்கள். இந்த தலைசிறந்த படைப்பில் இடம்பெற வாய்ப்பை வழங்கிய அவர்களுக்கு நன்றி. நாட்டு நாட்டு என்பது உலகம் முழுவதும் உள்ள ஒரு உணர்வு. இந்த உணர்வை ஒருங்கிணைத்த பாடலாசிரியர் சந்திரபோஸ், பாடகர்கள் ராகுல் சிப்பிலி கஞ்ச்- கால பைரவா மற்றும் நடன இயக்குனர் பிரேம் ரஷித் ஆகியோருக்கு நன்றி.

என் சக நடிகரான தாரக்கிற்கு நன்றி சகோதரா. உங்களுடன் நடனமாடி மீண்டும் சாதனை படைப்பேன் என்று நம்புகிறேன். என்னுடைய இனிமையான நடிகையாக இருந்ததற்கு நன்றி ஆலியா பட் என்று தெரிவித்திருக்கும் ராம்சரண், இந்த விருது ஒவ்வொரு இந்திய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைப்பட பார்வையாளர்களுக்கு சொந்தமானது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது நம் நாட்டின் வெற்றி என்று அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார் நடிகர் ராம்சரண்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.