குதிரை மேலே நின்றவரே சிலம்பம் சுற்றிய 5 வயது சிறுவன் சாதனை படைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சின்ன மேடம் பட்டி பகுதியில் தமிழ்வாணன் என்ற நபருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், ரோகன் குமார் என்ற மகனும் இருக்கின்றனர். மோகன் குமார் எல்கேஜி படித்து வரும் நிலையில் அவர் முறையாக சிலம்பம் பயின்று வருகின்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரோகன் குமார் குதிரை மேலே நின்றவாறு சிலம்பத்தை சுற்றி பலரையும் வியக்க வைத்தார். இத்தகைய நிலையில் இதை வைத்து சாதனை செய்ய வேண்டும் என்று நினைத்த ரோகன் குமார், தொடர் பயிற்சியில் ஈடுபட்டார்.
அந்த வகையில் குதிரை மேல் ஏறி நின்றவாறு இரண்டு மணி நேரம் இரட்டை சிரமங்களை சுற்றிய ரோகன் குமார் நோபல் உலக பதிவேட்டில் சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அத்துடன் சிலம்பம் சுற்றும் போது உடல் உறுப்புகள் பற்றி விழிப்புணர்வு படங்களை வரைந்தும் ரோகன் குமார் அசத்தியிருக்கிறார்.