மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்க மறுத்தார் டிரான்!


இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்ற போராட்டங்களை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட
வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ், ஏற்க
மறுத்துள்ளார்.

முன்னதாக, மார்ச் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் களனி
பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களைக் கட்டுப்படுத்த பொலிஸார்  மற்றும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை
நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு

அதன்படி, இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அமைச்சருக்கு மனித உரிமைகள்
ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்க மறுத்தார் டிரான்! | Human Rights Commission Sri Lanka Protest Police

எனினும் உரிய முறைப்படி உரிய அழைப்பை மேற்கொள்ளப்படாததால், அமைச்சர்,
ஆணைக்குழுவில் பிரசன்னமாகவில்லை என்று அமைச்சின் பேச்சாளர் ஒருவர்
தெரிவித்துள்ளார்.

அமைச்சரை ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைப்பதற்கான தீர்மானம் அதன் தலைவரால்
எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆணைக்குழுவின் ஏனைய நான்கு உறுப்பினர்களும் அழைப்பு குறித்து
அறிந்திருக்கவில்லை எனவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.