திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணுவது வழக்கம். அதன்படி, தை மற்றும் மாசி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி, இரவு 7.30 மணி வரை நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியலில் ரூ.2 கோடியே 81 லட்சத்து 18 ஆயிரத்து 750 காணிக்கையாக கிடைத்தது. இதுதவிர, 405 கிராம் தங்கம், 2 கிலோ 385 கிராம் வெள்ளி ஆகியவையும் இருந்தன.
