நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு கேட்க கேட்க இனிக்கும் கேவிஎம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்று சொல்லக்கூடியவகையில் போய்க்கொண்டிருக்கிறது தொலைத்தொடர்பில் நாளுக்கு நாள் பெருகிவரும் அதிநவீனம். ஆனால் இதெல்லாம் இல்லாமல் மனிதன் நிம்மதியாக வாழ்ந்த காலத்தில் அவன் தழுவிய பொழுதுபோக்கு அம்சங்கள் அழகானவை, அமைதியானவை, சாகா வரம் பெற்றவை.. அப்படிப்பட்ட காலத்தில் பிறந்து சாதனை படைத்து கோடானு கோடிபேர் காதுகளில் இசை அருவியை பாயச்செய்தவர் திரைஇசைத் திலகம் கே.வி.மகாதேவன். 1940களில் தொடங்கி […]
