புதுடில்லி, வரும் 2024 – 25ம் ஆண்டு, ராணுவ உற்பத்தியை 1.75 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது குறித்து ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் நேற்று ராஜ்யசபாவில் கூறியதாவது:
நம் ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், உபகரணங்களை அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் தயாரிக்கின்றன. இந்த வகையில், கடந்த 2017 – 18ல் நம் ராணுவ உற்பத்தியின் மதிப்பு 54 ஆயிரத்து 951 கோடி ரூபாயாக இருந்தது.
இது, 2021 – 22ல் 86 ஆயிரத்து 78 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதை அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்படி, 35 ஆயிரம் கோடி ரூபாய் ராணுவ ஏற்றுமதியுடன் சேர்த்து, நம் ராணுவ உற்பத்தியை 2024 – 25ல் 1.75 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement