புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் பல்வேறு காரணங்களைக் கூறி தமிழ்நாட்டை விட்டு வெளியேறியதால் சென்னையில் ஆவின் பால் விநியோகம் நேற்று இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டதாக முகவர்கள் குற்றம்சாட்டினர். தமிழ்நாட்டில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரவியதை அடுத்து வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களின் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள், குற்றப்பின்னணி உள்ளவர்கள் பலரும் மாநிலத்தை […]
