வாஷிங்டன் :இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவி சவுத்ரியை, அமெரிக்க விமானப் படையின் உதவி செயலராக தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு, அமெரிக்க செனட் சபையில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, ரவி சவுத்ரிக்கு ஆதரவாக, 65 பேரும், எதிராக, 29 பேரும் ஓட்டளித்தனர்.
இதன் வாயிலாக, அமெரிக்க விமானப் படையின் உதவி செயலராக பணியாற்றும் முதல் இந்திய- வம்சாவளி என்ற பெருமையை ரவி சவுத்ரி பெற்றுள்ளார்.
ரவி சவுத்ரி, 1993 – 2015 வரை விமானப் படை விமானியாக பணியாற்றினார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் பல போர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். ராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின், பெடரல் ஏவியேஷன் அலுவலகத்தில், மூத்த அதிகாரியாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.
ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவுவாசிகள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுவதற்காக, ரவி, அப்போதைய ஜனாதிபதி ஒபாமாவால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement