காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாமா லிங்ககுமார் வீட்டில் வசித்து வந்தவர் ஜெயந்தன் (20). இவர் மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் ஜெயந்தன் வீட்டிலிருந்த மின்விசிறியில் திடீரென தூக்கு போட்டுக் கொண்டுள்ளார். இதைப் பார்த்த உறவினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஜெயந்தனை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஜெயந்தன், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தாய், தந்தை இருவரும் உயிரிழந்த நிலையில், மாமா வீட்டில் வசித்து வந்த ஜெயந்தன், ஒரு தலை காதல் சம்பவத்தால் தற்கொலை செய்து செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.