குன்னூரில் முகாமிட்டிருக்கும் காட்டு யானைகள்… பீதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்!

சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடுமையான வெயில் மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக யானைக் கூட்டங்கள் மலை மாவட்டத்தை நோக்கி படையெடுத்து வருகின்றன குறிப்பாக குன்னூர் காட்டேரி பகுதியில் கடந்த சில நாட்களாக மூன்று யானைகள் முகாமிட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் குன்னூா் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலைக்கு 3 காட்டு யானைகள் கபந்த ஒரு வாரமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வந்த இந்த யானைகள் காட்டேரி, ரன்னிமேடு, உலிக்கல், கிளன்டேல் போன்ற பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் மாறி மாறி முகாமிட்டு வருகின்றன. தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு வரும் காட்டு யானைகளால் தேயிலை தோட்டங்களில் தேயிலை பறிப்பதற்கு தொழிலாளர்கள் செல்லக்கூடாது என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிளன்டேல் பகுதியில் இன்று மாலை முகாமிட்ட யானைகள் அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடாமலும் , சாலை பகுதிகளுக்குள் வராமல் தடுப்பதற்காக வனத்துறையினா் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இருப்பினும் கடந்த ஒரு வாரமாக போக்கு காட்டி வரும் 3 யானைகளை விரட்டும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் ஹில்குரோ ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் சென்ற காட்டு யானை கூட்டம் மலை ரயிலை வழி மறித்தது சாதுரியமாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர் மலை ரயிலை பின்னோக்கி எடுத்துச் சென்றார் யானைகள் தண்டவாளத்தை கடந்த பின்பு அரை மணி நேரம் தாமதமாக மலை ரயில் குன்னூர் வந்தடைந்தது. இந்நிலையில் மீண்டும் காட்டேரி பகுதியில் தேயிலை தோட்டங்களில் யானை கூட்டம் முகாமிட்டிருப்பதால் தேயிலைத் தோட்ட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர் மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.