மாலை நேரம் ஆனால் தேநீரோடு நொறுக்கி உண்பதற்கு கண்டிப்பாக காரமானதாக ஏதாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று மனம் ஏங்கும்.
மாலை தேநீர் வேலையோடு உண்பதற்கு வீட்டிலேயே ஒரு சில இலகுவான பொருட்களை கொண்டு இந்த ஸ்னாக்ஸினை செய்து குடும்பமாக உண்டு மகிழலாம். அதனை எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
2 உருளைக்கிழங்குகள்
- லீக்ஸ் இலைகள்
- ½- வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்கள்
- உப்பு தேவையான அளவு
-
மிளகு காரத்திற்கேற்ப
-
இடித்தமிளகாய் தூள் காரத்திற்கேற்ப
-
மிளகாய் தூள்
மஞ்சள் சுவைக்கேற்ப
-
சோள மாவு-2மேசைக்கரண்டி
- கோதுமை மாவு-150 கிராம்
- தேங்காய் எண்ணெய் -சிறிதளவு

செய்முறை
-
அவித்து பொடியாக்கப்பட்ட 2 உருளைக்கிழங்குகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
- லீக்ஸ் இலைகளை சற்று நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
- ½ வெங்காயத்தை நறுக்கி எடுத்துககொள்ளுங்கள்.
- 2 நறுக்கிய பச்சை மிளகாய்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
- இவை அனைத்தையும் ஒன்றாகப்போட்டு பிசைந்துக்கொள்ள வேண்டும்.
- பிசையும்போது தண்ணீர் சேர்ககக்கூடாது.
- சிறிய ரோல் வடிவத்தில் பிணைந்துக்கொள்ள வேண்டும்.
- பின் வேறு ஒரு பாத்திரத்தில் உப்பு கோதுமை மாவு 150 கி, உடன் தேங்காய் எண்ணெய் 1 மேசை கரண்டியோடு பிணைய வேண்டும்.
- இந்த கலவையில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்.
- 10 நிமிடங்கள் பொடனிரு அதனை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.
- கோதுமை மாவு 1 மேசை கரண்டி மற்றும் அத்தோடு தேங்காய் எண்ணெய் 2மேசை கரண்டி சேர்த்து கலக்கி கொள்ளுங்கள்.
-
ஓட்டாத பதத்தில் வரும்போது உருட்டி வைத்து கொள்ளுங்கள்.
பின் தட்டையாக ரொட்டி போல தட்டிக்கொள்ளுங்கள்.

- மெல்லியதாக உருட்டி கொண்டு அதன் மேல் முதலில் செய்த கலவையை வைத்துவிடுங்கள்.
- வைத்த அந்த உருண்டையின் அளவுக்கேற்ப தட்டையாகப்பட்ட மாவை நீளமாக வெட்டிக்கொள்ளுங்கள்.
- அழகிய செவ்வக வடிவில் வெட்டிக்கொள்ளுங்கள்.பின்பு முதலில் வைத்த கலவையை இந்த கலவையோடு சேர்த்து ரோல் வடிவில் உருட்டிக்கொள்ளுங்கள்.
- இதற்கு முன்பு நாம் கோதுமை மாவில், செய்த பேஸ்டினை வைத்து இறுதியில் ஒட்டிவிடுங்கள்.
-
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாகிய எண்ணெயில் பொன்னிறம் ஆன பிறகு போட்டு பொரித்து விடுங்கள்.
- சுவையான கிறிஸ்பிய ஸ்னாக்ஸ் தயார்!
- உங்களுக்கு விரும்பியவாறு சாசுடனோ அல்லது சீசுடனோ சாப்பிடலாம்.
