சசிகலா உடன் சந்திப்பு எப்போது? மதுரையில் அடுத்த திட்டத்தை உடைத்த ஓபிஎஸ்!

அதிமுகவில்

,

இடையிலான அதிகார மோதலில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜூலை 11, 2022ல் நடந்த பொதுக்குழு செல்லும் என்று உத்தரவிடப்பட்டதால் எடப்பாடியின் கை ஓங்கியது. அதேசமயம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி கீழமை நீதிமன்றம் தான் முடிவு செய்யும்.

நீதிமன்ற வழக்குகள்

இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக உத்தரவிட்டது. இது ஓபிஎஸ் தரப்பிற்கு சற்றே ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த பாயிண்டை வைத்து கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது. அடுத்தகட்டமாக தேர்தல் ஆணையத்தில் முறையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் முடிவுகள்

இதற்கிடையில் எடப்பாடி தரப்பும் நீதிமன்றத்தை அணுகியதால் அடுத்த சட்டப் போராட்டத்திற்கு அதிமுக தயாராகி இருப்பதை பார்க்க முடிகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எடப்பாடி, ஓபிஎஸ் என இரண்டு தரப்பிற்கும் சில பாடங்களை கற்பித்துள்ளது. இருப்பினும் டெல்லியின் சிக்னலை பொறுத்தே அதிமுகவின் எதிர்காலம் அமையும் என்ற கருத்தை அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கின்றனர்.

பாஜகவின் கணக்கு

பாஜகவை பொறுத்தவரை ஒருங்கிணைந்த அதிமுகவை தான் பெரிதும் எதிர்பார்க்கிறது. ஏனெனில் 2024 மக்களவை தேர்தலில் சில தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளது. இவற்றில் வெற்றி பெற அதிமுகவின் தயவு கட்டாயம் தேவை. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன்,

ஆகிய அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகிறது.

அதிமுகவின் எதிர்காலம்

ஏனெனில் இவர்கள் பின்னால் இருக்கும் சமூக ரீதியிலான வாக்குகள் வெற்றி வாய்ப்பில் முக்கியமான பங்காற்றும் என்ற எதிர்பார்ப்பு நீடிக்கிறது. ஆனால் பொதுக்குழு தீர்ப்பு விவகாரத்தில் டெல்லி தன்னை கைவிட்டு விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தியில் இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியில் அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வுகளை உற்று நோக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்,

பட்ஜெட் குறித்த கேள்விக்கு,

வரும் 20ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தாக்கல் செய்யப்பட்ட உடன் என்னுடைய கருத்தை பதிவு செய்வேன்.

அமமுக உடன் சேர்ந்து செயல்படுவீர்களா? என்ற கேள்விக்கு,

வாய்ப்பிருந்தால் உறுதியாக இணைந்து செயல்படுவேன்.

சசிகலா சந்திப்பு குறித்த கேள்விக்கு,

உறுதியாக கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன்.

அதிமுகவில் புதிய உறுப்பினர் அட்டை, பொதுச் செயலாளர் தேர்தல் பற்றிய கேள்விக்கு,

அவர்களின் நடவடிக்கைகள் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை சட்ட நீதிக்கு புறம்பாக தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது அனைவருக்கும் தெரியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜூலை 11, 2022 அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றிய கேள்விக்கு,

நாங்கள் மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.