பெங்களூரு: சந்திரயான் 3 விண்கலத்தின் ஒலியியல் மற்றும் அதிர்வு சோதனைகள் வெற்றிகரமாக நடந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான் -3 விண்கலத்தை ஜூன் இறுதியில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ள நிலையில் விண்கல ஒலியியல் சோதனையும் வெற்றி பெற்றுள்ளது.
