தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு – தமிழக அரசு அரசாணை!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிப்புரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் தற்போதுவரை ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நல  பள்ளிகளில் 221 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

மேலும், புதிதாக 194 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 415 தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கி தற்போது தமிழக அரசு அரசனாய் பிறப்பித்துள்ளது. அதன்படி, 

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

* பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

* முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.