புதுடெல்லி: மூளைச் சலவை செய்து தீவிரவாத செயல்களில் முஸ்லிம் இளைஞர்களை ஈடுபடத் தூண் டியதாக பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) உறுப்பினர்
கள் 2 பேர் மீது தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியிலுள்ள பிஎஃப்ஐ அமைப் பின் உறுப்பினர் முகமது ஆசிப் (எ) ஆசிக். பரான் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் சராப். இவர்கள் இருவரும் தீவிரவாத செயல்களில் ஈடுபட முஸ்லிம் இளைஞர்களைத் தூண்டியதாகவும், அவர்களை தங்களது இயக்கங்களில் சேர்த்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து 2 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில் இவர்கள் 2 பேர் மீதும் குற்றப்பத்திரிகையை என்ஐஏ நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர். 2 பேர் மீது கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தீவி ரவாத செயல்களில் ஈடுபடத் தூண்டியதோடு, ஆயுதங்கள் வாங்கவும், வன்முறைச் சம்பவங் களில் ஈடுபடுவதற்கும் நிதியையும் அவர்கள் திரட்டியும் உள்ளனர் என்று குற்றப்பத்திரிகையில் என்ஐஏ தெரிவித்துள்ளது.
பயிற்சி முகாம்: மேலும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக முஸ்லிம் இளைஞர்களைச் சேர்க்க பயிற்சி முகாம்களையும் அவர்கள் நடத்தியுள்ளனர். நாட்டில் முஸ்லிம் ஆட்சியை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை மூளைச்சலவை செய்து மத ரீதியிலான மோதல்களை ஏற்படுத்தவும் அவர்கள் முயற்சி செய்து வந்துள்ளனர் என்றும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.