கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பக்தர் தலையில் அடுப்பு போன்ற சாதனத்தை வைத்து நெருப்பு பற்ற வைத்து, அதில் பொங்கல் வைத்து படையலிடும் வினோத திருவிழா நடைபெற்றது.
சேப்பாக்கம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மாசி திருவிழாவையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் உள்ளிட்டவை நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான பக்தர் தலையில் பொங்கல் வைத்து படையலிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.