பற்கள் பிடுங்கப்பட்டு, சாவை நெருங்கும் வரை சித்திரவதை செய்யப்பட்ட இளைஞர்., அவுஸ்திரேலியாவில் பகீர் சம்பவம்


அவுஸ்திரேலியாவில் பலவந்தமாக பற்கள் பிடுங்கப்பட்டு மரணத்தை நெருங்கும் வரை சித்திரவதை செய்யப்பட்ட நபர் பொலிஸாரால் மீட்கப்பட்டார்.

சிட்னியில் 26 வயது இளைஞரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் பொலிஸார் ஆயுதமேந்திய சோதனையில் அந்த நபரை மீட்டுள்ளனர். அவர் ஆறு நாட்களாக சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.

கடத்தல் கும்பல்

பீட்டர் வூங் (Peter Vuong) என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட நபர், கடத்தல்கார கும்பலால் கடத்தப்பட்டதாகவும், தன்னை பல துண்டுகளாக வெட்டவுள்ளதாக வெளிப்படையாக அச்சுறுத்தியதாகவும் கூறினார்.

பற்கள் பிடுங்கப்பட்டு, சாவை நெருங்கும் வரை சித்திரவதை செய்யப்பட்ட இளைஞர்., அவுஸ்திரேலியாவில் பகீர் சம்பவம் | Australia Man Tortured To Near Death Rescued7NEWS

சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருந்த வூங்கின் பற்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதாக அவர் கூறினார்.

மிரட்டி பணம் பறிக்கும் அந்த கும்பல்

கடத்தப்பட்டபோது, வூங் ஸ்மித்ஃபீல்டில் உள்ள அவரது குடும்ப வீட்டில் ஏஞ்சல் போயர் எனும் சமூக வலைதள பிரபலத்துடன் படுக்கையில் இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த வியாழன் அதிகாலை 5.20 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) ஆறு பேர் வீட்டிற்குள் நுழைந்து வூங்கை கடத்திச் சென்றதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. கடத்தல்காரர்கள் தங்கள் முகத்தை மூடிக்கொண்டு ஸ்லெட்ஜ்ஹாமர்கள் மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

பற்கள் பிடுங்கப்பட்டு, சாவை நெருங்கும் வரை சித்திரவதை செய்யப்பட்ட இளைஞர்., அவுஸ்திரேலியாவில் பகீர் சம்பவம் | Australia Man Tortured To Near Death Rescued9News

வூங் ஆறு நாட்களில் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும், மிரட்டி பணம் பறிக்கும் அந்த கும்பல் 5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலரை கேட்டு ஓடியோ அனுப்பியிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறிது சிறிதாக வெட்டுவோம்

அந்த ஆடியோவில், “எங்களின் 2 தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்ய முடியாவிட்டால், நாங்கள் விரும்புவதைக் கொடுக்கும் வரை உங்கள் பையனை சிறிது சிறிதாக வெட்டுவோம்” என கடத்தல்காரர்கள் கூறியுள்ளனர்.

தற்போது பொலிஸாரால் மீட்கப்பட்ட வூங், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் சம்பவ இடத்தில் துணை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் நிலையாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகவல்களின்படி, சந்தேக நபர்கள் லோலோ லியாவா மற்றும் விலியாமி சியாசாவ் (இருவரும் 19 வயது), வலாலி டோங்கா, சுனியா சியாசா மற்றும் ஜான் டோட்டாவ் ஃபஹமோகியோவா (அனைவருக்கும் 20 வயது), மற்றும் கிடோ டாடாஃபு, 21 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.