மும்பை, பிரபல பாலிவுட் நடிகர் சமீர் காக்கர், 71, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த சமீர் காக்கர், 1980களில் ‘நுக்கட், சர்க்கஸ்’ உள்ளிட்ட துார்தர்ஷன் ‘டிவி’ தொடர்களில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் ஜெய் ஹோ, நடிகர் கமல்ஹாசனின் புஸ்பக் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேடை நாடகங்கள், டிவி தொடர்கள், திரைப்படங்கள் என பல துறைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்த இவர், உடல் நலக்குறைவு ஏற்பட்டு சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று அவரது உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில், மருத்துவமணையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு, பாலிவுட் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement