பிரமதர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு…?

Nobel Peace Prize: அமைதிக்கான நோபல் பரிசின் போட்டியாளர்களில் முதன்மையானவர்களுள் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர் என நார்வேயைச் சேர்ந்த நோபல் பரிசுக் குழு உறுப்பினர் அஸ்லே டோஜே தெரிவித்துள்ளார். டோஜே ஊடகம் ஒன்றில் பேசுகையில், மோதலில் உள்ள நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்டக்கூடிய, உலகின் மிகவும் நம்பகமான தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக உள்ளார், என்றார்.

இது போரின் சகாப்தம் அல்ல

ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைவதைக் குறைப்பதற்கான பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த டோஜே,”உக்ரைன் நெருக்கடியில் பிரதமர் மோடி  உரிய நேரத்தில் தலையிட்டு, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக ரஷ்யாவை எச்சரித்துள்ளார்” என்றார். உக்ரைன் நெருக்கடி குறித்து உரையாற்றும் போது மோடியின் கருத்தை டோஜே குறிப்பிட்டார். அதாவது, “இன்றைய சகாப்தம் போரின் சகாப்தம் அல்ல” என்று கூறினார். 

“உலகில் உள்ள எந்தவொரு பொறுப்புள்ள தலைவரும் இந்த செய்தியை தெரிவிக்க விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன். இந்தியா போன்ற சக்திவாய்ந்த நாட்டில் இருந்து வரும்போது இது மிகவும் முக்கியமானது” என்று அஸ்லே டோஜே கூறினார். மோடி உலகெங்கிலும் உள்ள மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் என்றும், பல ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பணியாற்றியுள்ளார் என்றும், அது அவருக்கு உலகளவில் மிகுந்த மரியாதையை ஈட்டியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

நட்பு குரலுடன்…

வளரும் பொருளாதாரத்தில் இருந்து ‘உலகின் முதன்மைப் பொருளாதாரங்களில் ஒன்றாக’ இந்தியா பல ஆண்டுகளாக வளர்ச்சியடைந்ததை டோஜே பாராட்டினார். “இந்தியா மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தியா உலகத்துடன் பேசும்போது, நட்புக் குரலுடனும், அச்சுறுத்தல்கள் இன்றியும் பேச முனைகிறது” என்றார். 

மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி அதிகரிப்பு – அறிவிப்பு எப்போது?
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.