பொன்னேரி : பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர், காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேற்றுமுன்தினம் மாலை ஆய்வு செய்தார். அவருடன் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ். மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பல கிராமங்களில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மர்ம காய்ச்சல் தாக்குவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளாக சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இது சம்பந்தமாக மருத்துவமனைக்கு சென்ற பொன்னேரி எம்எல்ஏ. துரை சந்திரசேகர் பொதுமக்களை நேரில் சந்தித்தார். பின்னர், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது திமுக. காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் உடன் இருந்தனர் .