ரஷ்யாவின் பரந்த அளவிலான போர் குற்றம்: பகிரங்கப்படுத்திய ஐ.நா அறிக்கை


உக்ரைனில் பரந்த அளவிலான போர் குற்றங்களை ரஷ்யா செய்து இருப்பதாக ஐ,நா குற்றம்சாட்டியுள்ளது.


ரஷ்யாவின் போர் குற்றம்

உக்ரைனில் போர் நடவடிக்கையின் போது வேண்டுமென்றே கொலைகள், சித்திரவதைகள் மற்றும் குழந்தைகளை நாடு கடத்துதல் போன்ற போர் குற்றங்களை ரஷ்யா பரந்த அளவில் செய்து இருப்பதாக ஐ.நாவின் புலனாய்வு அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையானது 500 க்கும் மேற்பட்ட நேர்காணல்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் தடுப்புக்காவல் தளங்கள் மற்றும் கல்லறைகளில் சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பரந்த அளவிலான போர் குற்றம்: பகிரங்கப்படுத்திய ஐ.நா அறிக்கை | Russia Has Committed War Crimes In Ukraine Says UnReuters

இதற்கிடையில் ஹேக்கில்(The Hague) உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், உக்ரைனில் இருந்து குழந்தைகளை வலுக்கட்டாயமாக நாடு கடத்தியதற்காகவும், பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைத்ததற்காகவும் ரஷ்ய அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.


ரஷ்யா மறுப்பு

ஐ நா-வின் இந்த அறிக்கையில் உள்ள தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், ரஷ்ய தடுப்பு வசதிகளில் அதிகாரிகளால் எவ்வாறு இராணுவ தொலைபேசி மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மின்சார அதிர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது தெரியவந்துள்ளது.

ரஷ்யாவின் பரந்த அளவிலான போர் குற்றம்: பகிரங்கப்படுத்திய ஐ.நா அறிக்கை | Russia Has Committed War Crimes In Ukraine Says UnAAP / EPA

ஆனால் உக்ரைன் போர் விதிகளை மீறியதையோ, அட்டூழியங்களைச் செய்ததையோ ரஷ்யா மறுத்து வருகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.