புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி விக்கோ நிறுவனத்தின் புதிய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் கிரிக்கெட் வீரராகவும் பின்னர் கேப்டனாகவும், இறுதியில் பிசிசிஐ.யின் தலைவராகவும் இருந்த சவுரவ் கங்குலி விக்கோ ஷேவிங் கிரீமின் விளம்பர தூதராகி உள்ளார். சவுரவ் கங்குலியை விளம்பர தூதராக நியமித்திருப்பதன் மூலம், விக்கோ நிறுவனம் சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்தவும், புதிய தளங்களுக்கு தனது தயாரிப்பை எடுத்து செல்லவும் திட்டமிட்டுள்ளது.
கங்குலியை வைத்து சமீபத்தில் எடுத்த விக்கோ விளம்பரம் விக்கோ தயாரிப்புகள் எந்தளவு மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகி உள்ளது என்பதை சுருக்கமாக கூறுகிறது.
இந்த பிராண்ட் ஆயுர்வேதத்தின் பலன்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் நம்பிக்கை, ஆர்வம், தைரியம், நம்பகத்தன்மை மற்றும் வெற்றி அளிப்பதால் விக்கோவின் தயாரிப்புகளை பல ஆண்டுகளாக எங்கும் பார்க்க முடிகிறது.