அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ள ஆற்றில் சிக்கித் தவித்த நபரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
20 ஆண்டுகால வறட்சியைத் தொடர்ந்து மேற்கு கரையோர பகுதிகளில் மழை பெய்து வருவதால் லாஸ் ஏஞ்செல்ஸ் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இந்நிலையில், அந்த ஆற்றின் கரையோரமுள்ள கான்கிரீட்டை பிடித்துக் கொண்டு ஒருவர் போராடிக் கொண்டிருந்ததை அறிந்த மீட்புக் குழுவினர், ஹெலிகாப்டர் உதவியுடன் கயிறு கட்டி இறங்கி, அந்த நபரை ஆற்றில் இருந்து மேலே தூக்கி காப்பாற்றினர்.
அந்த நபர் எப்படி வெள்ளத்தில் சிக்கினார் என்பது தெரியவரவில்லை.