Lal Salaam: இன்ச் பை இன்ச்சாக செதுக்கும் ஐஸ்வர்யா… லால் சலாம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லால் சலாம் இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். லைகா புரடெக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

Meena, Nainika, Rajinikanth: இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தருமோ… ரஜினியிடம் கேட்ட நைனிகா!

லால் சலாம் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 8ஆம் தேதி செஞ்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முதற்கட்ட படப்பிடிப்பு 35 நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல மூத்த நகைச்சுவை நடிகரான செந்தில் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

செஞ்சியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் விஷ்ணு விஷாலுக்கும் செந்திலுக்குமான காட்சிகள் படமாகக்கப்படுவதாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கடைசியாக நடிகர் செந்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தற்போதுதான் மீண்டும் நடிக்கவுள்ளார் செந்தில்.

Meena, Rajinikanth: யார் கண்ணு பட்டுச்சோ… மீனாவின் கணவர் மரணம் குறித்து பேசி கலங்கிய ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்தும் நகைச்சுவை நடிகரான செந்திலும் வீரா, அருணாச்சலாம், எஜமான், படையப்பா உளிள்ள பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். படையப்பா படத்தில் செந்திலுக்கு அவருடைய நண்பர்கள் குழுவாக பெண் பார்க்க செல்வதும் அப்போது ரஜினி கூறும் மாப்பிள்ளை இவர்தான்… ஆனா அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது என ரஜினி பேசும் டயலாக் பெரும் பிரபலமானது.

இந்நிலையில் தற்போது பல வருடங்களுக்கு பிறகு ரஜினி காந்த் படத்தில் இணைந்துள்ளார் நடிகர் செந்தில். இதனால் இந்தப் படத்தில் இருவருக்குமான காட்சிகள் எப்படி இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு இப்போதே எகிற தொடங்கியுள்ளது. லால் சலாம் படத்திற்காக 7 நாட்கள் கால் ஷீட் கொடுத்துள்ள ரஜினிகாந்த் 25 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.

Sri Reddy: ஆணுறையை சுத்தம் செய்ய சொன்னார்… பிரபல நடிகர் மீது நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தனது 170வது படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.