ஈரோடு: ஈரோடு அருகே அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.87.33 லட்சம் மோசடி செய்த 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெருந்துறையைச் சேர்ந்த சுசி லேண்டு புரமோட்டர்ஸ் நிறுவனம் 2012ல் முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளது. ரூ.87.33 லட்சம் மோசடி செய்ததாக தனியார் நிறுவனம் மீது ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. பண மோசடி செய்த வழக்கில் எம்.எஸ்.குரு, அமுதன், பார்த்திபன், சுரேஷ் ஆகிய 4 பேரை போலீஸ் கைது செய்தது.
இது குறித்தான வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், மோசடி வழக்கு இன்று நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.87.33 லட்சம் மோசடி செய்த 4 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.81.90 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பு வழங்கினார்.