உருளைகிழங்குடன் இதயத்தை சமைத்த கொலைக்காரன்… உறவினர்களையே குத்திக்கொன்ற கொடூரம்!

Shocking Crime: 44 வயதான லாரன்ஸ் பால் ஆண்டர்சன் 2021ஆம் ஆண்டில் பல கொடூரமான கொலைகளைச் செய்தார். இந்த கொடூர கொலைகளுக்கு தற்போது அவருக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 4 வயது குழந்தை, ஒரு பெண் உள்பட மூன்று பேரை கொலை செய்துள்ளார். இவரின் கொடூர தாக்குதலில் இருந்து உயிர்பிழைத்த அவரின் அத்தை தற்போது இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ளார். ஆண்டர்சன் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர், அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த கொலைகளைச் செய்வதற்கு சில நாள்கள் முன்தான் அவர் சிறையில் இருந்து வெளிவந்திருந்தார். அமெரிக்காவின் ஓக்லஹோமாவின் கவர்னர் கெவின் ஸ்டிட் அவருக்கு பணிநீக்கம் வழங்கியபோது ஆண்டர்சன் போதைப்பொருள் வழக்கில் 20 ஆண்டு சிறைத்தண்டனையை மூன்றாண்டுகள் அனுபவித்தார். அவரது விடுதலையானது அரசின் வெகுஜன விடுதலை முயற்சியின் ஒரு பகுதியாகும், ஆனால் பின்னர் விசாரணையில் அவர் தவறுதலாக மாற்றப்பட்டியலில் சேர்க்கப்பட்டது என்று கண்டறியப்பட்டது.

மேலும் படிக்க | திவாலாகும் நிலையிலும் விடாத காஷ்மீர் மோகம்… OIC கூட்டத்தில் பிதற்றும் பாகிஸ்தான்!

அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, அவர் தனது உறவினரான ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப்பை கொலை செய்து, அவரது இதயத்தை தனியாக எடுத்துள்ளார். அவரின் அத்தை மற்றும் மாமாவின் வீட்டிற்கு சென்று உருளைக்கிழங்குடன் அந்த இதயத்தை சமைத்துள்ளார். அந்த உணவையும் அவர்களுக்கு பரிமாற முயற்சித்துள்ளார்.

பின்னர் அவர் 67 வயதான லியோன் பை, அவரது 4 வயது பேத்தி கேயோஸ் யேட்ஸ் ஆகியோரைக் குத்திக் கொன்றார்.  ஆண்டர்சன் கொலை, தாக்குதல் மற்றும் ஒருவரை ஊனமாக்கியது ஆகிய குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, ஐந்து தொடர்ச்சியான ஆயுள் தண்டனைகளைப் பெற்றார்.

தாக்குதலில் காயமடைந்த ஆண்டர்சனின் அத்தை மற்றும் பாதிக்கப்பட்ட மற்ற குடும்ப உறுப்பினர்கள், ஆண்டர்சனை தவறுதலாக விடுதலை செய்த ஓக்லஹோமா கவர்னர் மற்றும் சிறை பரோல் வாரியத்திற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | மனிதர்களை மிருகமாக்கும் Zombie Drug! அழுகும் தோல்… ஓட்டையாகும் கால்கள்! உஷார் மக்களே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.