சென்னை: உலக தண்ணீர் தினமான மார்ச் 22ந்தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது ஐஏஎஸ் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் உலக தண்ணீர் தினமான மார்ச் 22ம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலக தண்ணீர் தினமான […]
