ஓபிஎஸ் வீட்டிற்கு மு.க.ஸ்டாலின் திடீர் விசிட்; ஆறுதலும், நெகிழ்ச்சியும்!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தாய் பழனியம்மாள், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 94. வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதையொட்டி மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வந்தனர்.

ஓபிஎஸ் தாயார் மறைவு

ஆனால் வயது முதிர்வால் எதுவும்பலனளிக்கவில்லை. இதையடுத்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தெற்கு அக்ரஹாரம் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக பழனியம்மான் உடல் வைக்கப்பட்டது. அடுத்த நாள்

மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வந்தனர். அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்.

ஸ்டாலின் நேரில் அஞ்சலி

இந்நிலையில் முதல்வர்

இன்று (மார்ச் 17) சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு சென்றார். அவருடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்

சென்றிருந்தார். ஓபிஎஸ்சை நேரில் சந்தித்து தாயார் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். இந்த நிகழ்வு ஓபிஎஸ்சிற்கு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

அரசியல் நாகரிகம்

அரசியலில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர் சித்தாந்தத்தில் பயணித்தாலும் சரி. மரியாதை நிமித்தமான சந்திப்புகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று. இன்ப, துன்பங்களில் கலந்து கொள்வது அரசியல் நாகரிகமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையிலேயே பெரிய இழப்பை சந்தித்துள்ள ஓபிஎஸ்சிற்கு ஆறுதல் கூற மு.க.ஸ்டாலின் நேரில் சென்றிருக்கிறார்.

அதிமுகவில் பிளவு

ஆனால் எடப்பாடி தரப்பில் இருந்து யாரும் நேரில் வந்து ஆறுதல் கூறவில்லை. ஏனெனில் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ்சை கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர். இதுதொடர்பாக ஜூலை 11, 2022ல் நடந்த அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்த சலசலப்பு இன்னும் ஓயவில்லை. நீதிமன்ற வழக்குகள், தேர்தல் ஆணைய முறையீடுகள் என தொடர் கதையாகி வருகிறது.

ஆதரவு வட்டம்

தற்போது ஓபிஎஸ் பக்கம் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட சில நிர்வாகிகள் மட்டும் இருக்கின்றனர். பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் எடப்பாடி பக்கம் நிற்கின்றனர். இருப்பினும் இருவரும் தலைமை கழக நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் என தனித்தனியே நியமித்து கொண்டனர்.

ஓபிஎஸ் மனைவி

இதில் எடப்பாடியின் கையே ஓங்கியிருப்பதாக நீதிமன்ற தீர்ப்புகள் கூறி வருகின்றன. இருப்பினும் சட்டப் போராட்டங்கள் இன்னும் முடிவுக்கு வராததால் ஓபிஎஸ்சின் எதிர்காலம் என்னவென்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த 2021ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு வயது 63. இந்த தம்பதியினருக்கு ரவீந்திரநாத், ஜெயபிரதீப் ஆகிய இரண்டு மகன்களும், கவிதா என்ற மகளும் இருக்கிறார். இதில் ரவீந்திரநாத் தேனி மக்களவை தொகுதி எம்.பியாக பதவி வகித்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.