கனேடிய மாகாணமொன்றில் முதுகில் சிறிய பையுடன் சிறைச்சாலைக்குள் பறந்துவந்த புறா: பைக்குள் என்ன இருந்தது தெரியுமா?

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சிறை ஒன்றிற்குள் புறா ஒன்று பறந்து வந்தது. அதில் ஒரு ஆச்சரியமும் இல்லைதான். ஆனால், அந்த புறாவின் முதுகில் ஒரு சிறிய முதுகுப்பை பொருத்தப்பட்டிருந்தது.

பைக்குள் என்ன இருந்தது?

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Abbotsford என்னும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறை ஒன்றிற்குள் ஒரு புறா பறந்து வந்ததைக் கண்ட பொலிசார், அதன் முதுகில் ஒரு சிறிய பை பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.

அந்தப் பை ஜீன்ஸ் துணியால் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் பைக்குள் எதுவும் இல்லை! 

கனேடிய மாகாணமொன்றில் முதுகில் சிறிய பையுடன் சிறைச்சாலைக்குள் பறந்துவந்த புறா: பைக்குள் என்ன இருந்தது தெரியுமா? | Pigeon Prison In A Canadian Province With A

Richard Lam/The Canadian Press

ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம்

ஏற்கனவே, இரண்டு மாதங்களுக்கு முன் இதேபோல் முதுகுப்பையுடன் வந்த புறா ஒன்றை பொலிசார் சோதனையிட்டபோது, அதன் முதுகிலிருந்த பையில் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், இந்த முறை சிறைக்குள் வந்த புறாவின் முதுகிலிருந்த பைக்குள் எதுவும் இல்லாததால், அந்தப் புறாவுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக, அதாவது அந்தப் புறா பயிற்சி காலகட்டத்தில் இருப்பதாக பொலிசார் கருதுகிறார்கள்.

கனேடிய மாகாணமொன்றில் முதுகில் சிறிய பையுடன் சிறைச்சாலைக்குள் பறந்துவந்த புறா: பைக்குள் என்ன இருந்தது தெரியுமா? | Pigeon Prison In A Canadian Province With A

Ben Nelms/CBC

அந்தப் புறா எங்கிருந்தது வந்தது, அதை அனுப்பியது யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளார்கள்.

கனேடிய மாகாணமொன்றில் முதுகில் சிறிய பையுடன் சிறைச்சாலைக்குள் பறந்துவந்த புறா: பைக்குள் என்ன இருந்தது தெரியுமா? | Pigeon Prison In A Canadian Province With A

Ben Nelms/CBC

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.