
கொலம்பியாவில் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 -ஆக உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் சுரங்கப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவி சௌத்ரி, அமெரிக்க விமானப் படையின் உதவிச் செயலராக நியமிக்க உறுதி செய்யப்பட்டிருக்கிறார்.

பயங்கரவாத குறியீட்டுப் பட்டியலில் ஆப்கானிஸ்தானைப் பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடித்தது. பயங்கரவாத தாக்குதலில் தெற்காசியாவில் அதிக பாதிப்புக்குள்ளான நாடாக பாகிஸ்தான் இருக்கிறது.

கனட தேர்தலில் சீனாவின் தலையீடுகள் குறித்த வழக்கை விசாரிக்க முன்னாள் கவர்னர் ஜெனரலான (டேவிட் ஜான்ஸ்டன்) David Johnston நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கலிபோர்னியாவில் சிலிக்கான் வேலி வங்கி திவாலானதைத் தொடர்ந்து, டோரண்டோவில் உள்ள அந்த வங்கியின் கிளை கனட அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

சீன பில்லியனர் குவோ வெங்குய் (Guo Wengui) அமெரிக்காவில் மோசடி வழக்கில் சிக்கினார். இவர் முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உதவியாளருடன் தொடர்பு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லிபிய அணு ஆயுத தளத்திலிருந்து 2.5 டன் யுரேனியம் காணாமல் போனதாக ஐ.நா-வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஹேக்கர்களால் முடக்கப்பட்ட நேபால் பிரதமர் புஷ்பா கமல் தாஹலின் (Pushpa Kamal Dahal) டிவிட்டர் கணக்கு மீட்கப்பட்டது.

உக்ரைனுக்கு நான்கு ராணுவ விமானங்களை அனுப்பப் போவதாக போலந்து அறிவித்திருக்கிறது.