திருவண்ணாமலை மாவட்டத்தில் சரக்கு லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரியகோளப்பாடி பகுதியை சேர்ந்த இளையராஜா, சஞ்சய், சக்திவேல், காமாட்சி மற்றும் செல்வம் ஆகிய ஐந்து பேரும் காரில் இன்று காலை திருவண்ணாமலையில் இருந்து செங்கம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது பெரியகோளப்பாடி அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே இளையராஜா, சக்திவேல் காமாட்சி ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலத்த காயமடைந்த இரண்டு பேர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன்பாக நேற்றிரவு திருவண்ணாமலை வெறையூர் பகுதி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தாய்-மகன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.