கடந்த டிசம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி இயங்கும் நாட்களை அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை அனைத்து அரசு, அரசு நிதியுதவி, தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.