ராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் பலியானவர் தமிழர்! வெளியான செய்தி


இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகொப்டர் விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்த நிலையில், அதில் ஒருவர் தமிழர் என்று தெரிய வந்துள்ளது.

இந்திய ராணுவ ஹெலிகொப்டர்

அருணாச்சல பிரதேசத்தின் மாண்ட்லா மலைப்பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானது.

இதில் இரண்டு ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல் வெளியானது.

அவர்களில் ஒருவர் லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டி என்றும், மேஜர் ஜெயந்த் என்றும் என அடையாளம் காணப்பட்டது.

ராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் பலியானவர் தமிழர்! வெளியான செய்தி | Tamilan Major Jayanth Found Death Helicopter Crash

தமிழக ராணுவ வீரர்

இந்த நிலையில் மேஜர் ஜெயந்த் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவர் தேனி மாவட்டத்தின் ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இன்று அவரது உடல் ஜெயமங்கலத்திற்கு கொண்டு வரப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் குடும்பத்தில் இருந்து ராணுவத்திற்கு சென்ற முதல் நபர் ஜெயந்த் தான் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டியின் சொந்த ஊர் தெலங்கானா என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயந்த்/Jayanth

PTI



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.