தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளார் முகமது நசிமுத்தின் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
“தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளரின் கடிதங்களில், 25.05.2022 அன்று நடைபெற்ற 79வது வாரிய கூட்டத் தீர்மானம் 5-ன்படி, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு நிதி செலுத்தும், தொழிலாளர் விபத்தில் மரணமடைந்தால், அவர்களுக்கு விபத்து மரண உதவித் தொகையாக வழங்கப்படும் ரூ.1,00,000/ -த்தை ரூ.2,00,000/- ஆக உயர்த்தி வழங்க ஆணை வெளியிடுமாறு கோரியுள்ளார்.
இதை தமிழக அரசு மிக கவனத்துடன் ஆய்வு செய்து, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் நிதி செலுத்தும் தொழிலாளர் விபத்தில் மரணமடைந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் விபத்து மரண உதவித் தொகையினை ரூ.1.00,000/-லிருந்து ரூ.2.00.000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
இதனால் ஏற்படும் செலவை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டும். இந்த உயர்த்தப்பட்ட உதவித் தொகையினை வருகிற ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அதாவது 01.04.2023 முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.