Puneeth Rajkumar: நீங்க இறந்ததையே இன்னும் நம்ப முடியல: கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் ரசிகர்கள் கண்ணீர்

கன்னட மக்கள் இன்றளவும் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் செல்ல மகனாக இருந்தாலும் தன் திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் புனீத். அவரை பிரபலங்களும், ரசிகர்களும் பாசமாக அப்பு என்றே அழைத்தனர்.

நடிப்பு மட்டும் அல்ல டான்ஸ் ஆடுவதிலும் வல்லவர் புனீத் ராஜ்குமார். அவர் டான்ஸ் ஆடினால் அனைவரும் அசந்துபோய் பார்ப்பார்கள். புனீத் ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக். அவர் ஒர்க்அவுட் செய்த வீடியோக்களை பார்த்தவர்கள் எல்லாம், இது என்ன உடம்பா, ரப்பரா என வியந்தது உண்டு.

புனீத்தின் ஒர்க்அவுட் வீடியோக்களை பார்த்து பலருக்கும் ஒர்க்அவுட் செய்யும் ஆசையும் வந்தது. இப்படி ஃபிட்டாக இருந்து வந்த புனீத் ராஜ்குமார் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி காலை ஜிம்மில் ஒர்க்அவுட் செய்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புனீத் இறந்த செய்தி அறிந்த ரசிகர்கள் மருத்துவமனை முன்பு கூடிவிட்டார். அந்த பகுதியே மக்கள் வெள்ளமாக இருந்தது. அப்படி கோடானு கோடி மக்களின் அன்பை பெற்ற புனீத் ராஜ்குமாரின் பிறந்தநாள் இன்று.

இதையொட்டி அவரின் ரசிகர்கள் பல்வேறு நல்லகாரியங்களை செய்து வருகிறார்கள். அவரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்பு இறந்ததையே இன்னும் நம்ப முடியவில்லை என ரசிகர்கள் வேதனைப்படுகிறார்கள்.

புனீத் ராஜ்குமார் வாழ்ந்த பெங்களூர் நகரில் திரும்பும் பக்கம் எல்லாம் அவரின் போஸ்டர் அல்லது பேனரை பார்க்கலாம். டாக்ஸிகள், ஆட்டோக்களிலும் புனீத் ராஜ்குமார் சிரித்த முகமாக இருக்கும் ஸ்டிக்கர்களை காண முடியும்.

காலையில் எழுந்து வெளியே சென்று விட்டு மாலை வீடு திரும்பினால் வழியில் நிச்சயம் குறைந்தது மூன்று முறையாவது புனீத் போஸ்டர் அல்லது ஸ்டிக்கர்களை காண முடியும். அதனாலோ என்னவோ புனீத் இறக்கவில்லை, நம்முடன் தான் இருக்கிறார் என்கிற உணர்வில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

பெங்களூரில் வசிப்பவர்கள் கூறியிருப்பதாவது,

புனீத் ராஜ்குமார் சத்தமில்லாமல் பல உதவிகள் செய்து வந்திருக்கிறார். ஆனால் அது எல்லாம் அவர் இறந்த பிறகே வெளியே தெரிய வந்தது. இப்படி ஒரு நல்ல மனிதர் 46 வயதிலேயே சென்றிருக்கக் கூடாது. அவரை நேரில் பார்த்தது இல்லை. அவரின் ரசிகரோ, ரசிகையோ இல்லை. ஆனால் தற்போது அவரின் புகைப்படத்தை பார்த்தால் எங்களையும் அறியாமல் ஒரு ஸ்மைல் வருகிறது. அவரை நினைத்து பெருமைப்படத் தோன்றுகிறது.

Dhanush: எதிர்பார்த்ததை விட 10 மடங்கு அதிக பணம் கொடுத்து உதவினார் தனுஷ்: பொன்னம்பலம்

முன் பின் பார்க்காத ஒருவர் இறந்த பிறகு அவருடன் இப்படியொரு கனெக்ஷன் ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை என தெரிவித்துள்ளனர்.

புனீத் ராஜ்குமார் இறந்த பிறகு அவருக்கு கன்னட ரத்னா விருது வழங்கியது கர்நாடக மாநில அரசு. அந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புனீத்தின் பிறந்தநாளான இன்று ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான காந்தாரா படம் சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கும் ஐ.நா. அலுவலகத்தில் இன்று திரையிடப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.