Naatu Naatu Oscars: ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர். படக்குழுவை பார்த்து விஜய் பொறாமைப்படுவதாக தெலுங்கு ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன.
ஆஸ்கர்Oscars 2023 Live Updates: ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல்: இந்திய வரலாற்றில் புது சாதனைஎஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் நடித்த ஆர்.ஆர்.ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் இசையமைப்பாளர் கீரவாணியும், பாடலாசிரியர் சந்திரபோஸும் விருதை பெற்றுக் கொண்டார்கள். நாடு திரும்பிய அவர்களுக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல் முறைசிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய பட பாடல் நாட்டு நாட்டு ஆகும். இந்நிலையில் ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர். படக்குழுவுக்கு பிரபலங்கள் பலரும் போனிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய பட பாடல் ஆஸ்கர் விருது வென்றதை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்தனர். மொழி பேதமில்லாமல் பல பிரபலங்களும் வாழ்த்தினார்கள்.
Oscars 2023, Ram Charan: இந்திய பாரம்பரிய உடையில் ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்ற ஆர்.ஆர்.ஆர். படக்குழு
விஜய்பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அமிதாப் பச்சன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், மம்மூட்டி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, பிரபாஸ், கார்த்தி, சூர்யா, பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, கே.ஜி.எஃப். படம் புகழ் யஷ் என பலரும் ஆர்.ஆர். ஆர். படக்குழுவை வாழ்த்தினார்கள். இந்நிலையில் விஜய்யை பற்றி தெலுங்கு ஊடகங்கள் சில விமர்சித்துள்ளன.
சூர்யா
பொறாமை?ஆர்.ஆர். ஆர். படக்குழுவை பாராட்டி தமிழ் நடிகரான விஜய் ஒரு ட்வீட் கூட போடவில்லை. தெலுங்கு ப்ரொமோஷன்களை தவிர்த்து வந்தாலும், ஆந்திரா, தெலுங்கானாவில் தன் மார்க்கெட்டை அதிகரிக்க மட்டும் தீவிர முயற்சி செய்கிறார். ஒரு தென்னிந்திய படம் ஆஸ்கர் வென்றது இதுவே முதல் முறை. அப்படி இருக்கும்போது விஜய் ஒரு ட்வீட் போட்டால் அவர் இமேஜ் ஒன்றும் பாதிக்காது. விஜய் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா இல்லை பொறாமையா என்பது தெரியவில்லை என தெலுங்கு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரசிகர்கள்தெலுங்கு ஊடக செய்தியை பார்த்த விஜய் ரசிகர்கள் கூறியிருப்பதாவது, யாரை பார்த்தும் எங்கள் தளபதிக்கு பொறாமை இல்லை. அவரே சர்வதேச அளவில் விருது வாங்கியவர் தான். அவர் ஏன் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவை பார்த்து பொறாமைப்பட வேண்டும். லியோ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். அவ்வளவு தான். அதற்காக இப்படி எல்லாம் பேசக் கூடாது. ஆர்.ஆர். ஆர். படக்குழுவுக்கு போன் செய்து வாழ்த்தியிருப்பார். யார் கண்டது என தெரிவித்துள்ளனர்.