இலங்கை வரும் பயணிகளை பலவந்தமாக வாகனங்களில் ஏற்றும் கும்பல்


கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பலவந்தமாக வாகனங்களில் ஏற்றி பணம் சம்பாதிக்கும் 6 பேர் நேற்று கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இவர்களை கைது செய்துள்ளதுடன், இந்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தரகு பணம் வாங்கும் இந்த தரகர்கள், விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தின் முன்பு காத்திருந்து, முகவர்கள் இல்லாமல் நாட்டிற்குள் வரும் சுற்றுலாப் பயணிகளை வாகனங்களில் ஏறும்படி வற்புறுத்துவதை அவதானிக்க முடிகிறது.

மிரட்டி பணம் பறிப்பு

இலங்கை வரும் பயணிகளை பலவந்தமாக வாகனங்களில் ஏற்றும் கும்பல் | Gang Arrest A Gang Who Forcing Tourist

அதுமட்டுமல்லாமல் இலங்கைக்கு வரும் நபர்களின் பயணப்பொதிகளை வலுக்கட்டாயமாக ஏற்றி அவர்களை மிரட்டி பணம் பறிப்பதுடன், அவர்களுக்கும் பெரும் தொல்லை கொடுக்கும் வகையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இவ்வாறு செயற்படும் ஏனைய நபர்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.