திருவனந்தபுரம்: அதானியின் வர்த்தக மோசடிக்கு துணை போன மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கேரளா மாநில பத்தின மாவட்டத்தில் கண்டன பேரணி நடந்தது. திருவாளா சட்டசபை, ராணி சட்டசபை தொகுதியில் அடங்கிய பகுதிகளில் நடந்த போராட்டத்திற்கு கேரள மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யுமான விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஆண்டோ அன்டனி எம்.பி.,
சதீஷ் கோச்சு பரம்பில் மற்றும் காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர் .
பொது மக்களின் முதலீடுகளைக் கொண்ட எல் ஐ சி மற்றும் எஸ் பி ஐ நிறுவனங்களில் அதிக அளவில் கடன் உதவி வழங்கியமைக்கு கண்டனம் தெரிவித்து பலர் கோஷங்கள் எழுப்பினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement