ஜெயம் ரவி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பூலோகம். இந்த படத்தை இயக்குநர் என். கல்யாண கிருஷ்ணன். இது அவர் இயக்குநராக அறிமுகமான முதல் படமும் கூட. இந்நிலையில், அவர் இரண்டாவது முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அவர்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் அகிலன். பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் அகிலன் திரைப்படத்திற்கு சாம் சி.எஸ்.இசையமைத்திருக்கிறார். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தின் கதையை பொறுத்தவரை துறைமுகம் ஒன்றில் இருக்கும் கடத்தல் கும்பல் மற்றும் அங்கிருக்கும் அதிகாரிகளின் செயல்பாடுகள், அதனை சுற்றியிருக்கும் அரசியல் தலையீடுகளை பற்றி இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தில் குற்ற வேலைகளை செய்யும் ஹீரோவாக அறிமுகமாகிறார் அகிலன். அவர் துறைமுகத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பரந்தாமனுக்கு கீழ் வேலை செய்கிறார். ஆனால், திடீரென பரந்தாமனிடம் இருந்து வெளியேறும் அகிலன், அடுத்ததாக பரந்தமானையே ஓரம்கட்டி துறைமுகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுகள் கொண்டு வருகிறார்.
அதன்பிறகு எந்த விஷயம் வைரலாக வேண்டும், தனக்கு யார் எதிரியாக, துரோகியாக இருக்க வேண்டும் என்பதையும் அவனே முடிவு செய்கிறான். இதனால் இருவருக்கும் பகை உருவாகிறது. ஹார்பரில் சட்டவிரோத வேலைகள் அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் கோகுல் என்ற அதிகாரி திணறுகிறார். இதற்கு பின் நடக்கும் சம்பவங்களும் காரணங்களுமே அகிலன் திரைப்படம். மார்ச் 31 ஆம் தேதி ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் அகிலன் படம் வெளியாகிறது.