மலையாள நகைச்சுவை நடிகர் இன்னொசன்ட் மருத்துவமனையில் அனுமதி

மலையாள திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நகைச்சுவை நடிகராகவும், மலையாள நடிகர் சங்க தலைவராகவும் இருந்தவர் நடிகர் இன்னொசன்ட். தற்போது இவர் புற்றுநோய் தொடர்பான அவசர சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாக மருத்துவர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஏற்கனவே 2012ல் கேன்சர் இவரை முதன்முறையாக அட்டாக் செய்தது.. நீண்ட சிகிச்சைக்குப்பின் ஒரு வழியாக போராடி அதிலிருந்து மீண்டு வந்தார் இன்னொசன்ட். அப்போது நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் நின்று எம்.பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதுமட்டுமல்ல கேன்சர் பாதிப்பில் இருந்து தான் மீண்டு வர நடத்திய போராட்டம் குறித்து நகைச்சுவை உணர்வுடன் விளக்கும் விதமாக லாப்டர் இன் கேன்சர் வார்டு என்கிற புத்தகத்தையும் இவர் எழுதியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கேன்சர் பாதிப்பு எதுவும் இன்றி சில படங்களில் நடித்தும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வந்த இன்னொசன்ட், தற்போது மீண்டும் அதே கேன்சர் பாதிப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலக பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் கவலை அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.