விளாடிமிர் புடின் உலகின் ‘இந்த’ 123 நாடுகளில் அடியெடுத்து வைத்தால் கைது: ICC

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) வெள்ளிக்கிழமை கைது வாரண்ட் பிறப்பித்தது. புடினைத் தவிர, ரஷ்யாவின் குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவாவுக்கு எதிராகவும் ஐசிசி கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. புடினுக்கு எதிரான இந்த கைது வாரண்ட் ‘போர் குற்றத்திற்காக’ பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ICC தெரிவித்துள்ளது. உக்ரேனிய குழந்தைகளை வலுக்கட்டாயமாக ரஷ்யாவிற்கு சட்டவிரோதமாக அழைத்துச் சென்றதாகவும் ரஷ்ய ஜனாதிபதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புடின் இப்போது உலகின் 123 நாடுகளுக்குச் சென்றால், அவர் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

24 பிப்ரவரி 2022 அன்று, உக்ரைனில் நடந்த ‘போர் குற்றத்திற்கு’ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பொறுப்பேற்க வேண்டும் என்று ICC ஒரு அறிக்கையை வெளியிட்டது. ரஷ்யாவிற்கு, குழந்தைகள் சட்டவிரோதமாகவும் வலுக்கட்டாயமாக ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்றதாக புடின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்தில் புடின் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ராணுவ வீரர்களையும், மக்களையும் கடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், உக்ரேனிய குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்துவதை குழந்தைகள் உரிமையை பாதுகாக்கும் அமைப்பு தடுக்கவில்லை என்று குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு… அதிபரை பிடிக்க அரெஸ்ட் வாரண்ட் – சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!

உலகின் 123 நாடுகளில் கால் வைத்தால் கைது

போரின் போது, ​​ரஷ்ய இராணுவம் 24 பிப்ரவரி 2022 முதல் 16,000 க்கும் மேற்பட்ட உக்ரேனிய குழந்தைகளை ரஷ்யாவிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது என கூறிய ஐசிசி வழக்கறிஞர் கரீம் கான், புதின் மீதான போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் 123 உறுப்பு நாடுகளில் விளாடிமிர் புடின் ஒரு அடி எடுத்து வைத்தால் கூட , அவர் உடனடியாக கைது செய்யப்படுவார் என்று அவர் கூறினார். தடயவியல் விசாரணையின் அடிப்படையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

புடினை ஐசிசி கைது செய்யுமா?

சிசி தலைவர் பியோட்ர் ஹாஃப்மன்ஸ்கியின் வீடியோ அறிக்கையில், நீதிபதிகள் வாரண்ட்களை பிறப்பித்துள்ளனர், ஆனால் அவற்றை நிறைவேற்றுவது சர்வதேச சமூகத்தின் கையில் இருக்கும் என்று கூறினார். வாரண்ட்டை நிறைவேற்ற நீதிமன்றத்திற்கு சொந்தமாக எந்த காவல்துறையும் இல்லை என்று அவர் கூறினார். ஐசிசி தனது பணியை நீதிமன்றமாக செய்து வருகிறது என்றார். நீதிபதிகள் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளனர். அதன் நிறைவேற்றுவது சர்வதேச ஒத்துழைப்பைப் பொறுத்தது. இதற்கிடையில், கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர், ஐசிசி முடிவுக்கான தனது எதிர்வினையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைக் கைது செய்வதற்கான வாரண்ட் மூர்க்கத்தனமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார். ஐசிசியின் முடிவு சட்டப்படி செல்லாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | உருளைகிழங்குடன் இதயத்தை சமைத்த கொலைக்காரன்… உறவினர்களையே குத்திக்கொன்ற கொடூரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.