பிரித்தானியாவில் உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளை எச்சரிக்க, தொலைப்பேசிகளில் அவரச எச்சரிக்கை அமைப்பு!


 பிரித்தானியாவில் கடுமையான வானிலை நிகழ்வுகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.

இயற்கை சீற்றத்திலிருந்து காக்க எச்சரிக்கை

கடுமையான வானிலை நிகழ்வுகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகள் குறித்து புதிய பொது எச்சரிக்கை அமைப்பை சோதிக்க, அடுத்த மாதம் இங்கிலாந்து முழுவதும் உள்ள மொபைல் போன் பயனர்களுக்கு, சைரன் போன்ற எச்சரிக்கை அனுப்பப்படும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி மாலையில் பிரித்தானியா முழுவதும் விழிப்பூட்டல் சோதனை நடைபெறும், இதன் மூலம் மக்கள் தங்கள் மொபைல் போன்களில் சோதனை குறுஞ்செய்தியைப் பெறுவார்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளை எச்சரிக்க, தொலைப்பேசிகளில் அவரச எச்சரிக்கை அமைப்பு! | Uk Emergency Alert To Warn Of Life Threatning@pa media

புதிய அவசர எச்சரிக்கைகள் மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படும் என்றும், மக்களின் உயிருக்கு உடனடி ஆபத்து உள்ள இடங்களுக்கு மட்டுமே அனுப்பப்படும் என்றும், அதனால் மக்களுக்கு அடிக்கடி தொந்தரவு தரும் வகையில் எச்சரிக்கை செய்தியைப் பெற மாட்டார்கள் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.

பல உயிரைக் காப்பாற்றும்

“வெள்ளம் முதல் காட்டுத்தீ வரை பலவிதமான அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, புதிய அவசரக்கால எச்சரிக்கைகள் அமைப்பு மூலம் எங்கள் தேசிய பின்னடைவை நாங்கள் வலுப்படுத்துகிறோம்,” என்று அமைச்சரவை அலுவலக அமைச்சர் ஆலிவர் டவுடன் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளை எச்சரிக்க, தொலைப்பேசிகளில் அவரச எச்சரிக்கை அமைப்பு! | Uk Emergency Alert To Warn Of Life Threatning@Darren Staples / reuters

“உடனடி ஆபத்தில் இருக்கும் மக்களை எச்சரிக்கும் மற்றும் தெரிவிக்கும் எங்கள் திறனில் இது புரட்சியை ஏற்படுத்தும், மேலும் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் நாம் பார்த்தது போல, தொலைப்பேசியின் சத்தம் ஒரு உயிரைக் காப்பாற்றும்,” என்று அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளை எச்சரிக்க, தொலைப்பேசிகளில் அவரச எச்சரிக்கை அமைப்பு! | Uk Emergency Alert To Warn Of Life Threatning@govt.uk

அவசரக்கால சேவைகள், போக்குவரத்து குழுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஏஜென்சியின் சக பணியாளர்கள் உட்பட, இந்த அமைப்பை மேம்படுத்துவதில் பிரித்தானியா முழுவதும் உள்ள பல பங்குதாரர்கள் நெருக்கமாக பணியாற்றி வருவதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.